விநாயகரின் 11 வகை விரதங்கள்
விநாயகர் அருள் பெற பதினோரு வகையான விரதங்களை, நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கிறார்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை விரதம் வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக் கிழமை தொடங்கி, ஒரு ஆண்டு முழு வதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை வழிபடும் விரதம் இதுவாகும். சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்று, விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும். இந்த நாளில் நாம் விநாயகரை வழிபாடு செய்தால் காரியத் தடைகள் நீங்கிவிடும். தூர்வா கணபதி விரதம் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் விரதம் இது. அன்றயை தினம் விநாயகப்பெருமானை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபாடு செய்வதன் மூலம் வம்ச விருத்தி உண்டாகும். செவ்வாய்க்கிழமை விரதம் ஆடி மாத முதல் செவ்வாய் தொடங்கி ஓராண்டு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமையில், விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதம் இது. இதனால் செவ்வாய்தோஷம் நீங்கும். சித்தி விநாயக விரதம் புரட்டாசி மாத வளர்பிறை 14-ம் திதியான சதுர்த்தசி திதியில் விரதம் இருப்பது, இந்த விரதத்தின் ச...






